Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம்: எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (08:22 IST)
இந்தியா முழுவதும் 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
 
அதாவது, இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில், மூன்றில் இரு பங்கு இந்தியர்களுக்கு உடலில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விட்டதாகவும், மீதமுள்ள 40 கோடி பேருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 
 
அதாவது சுமார் 80 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு திறன் ஏற்பட்டிருப்பதாகவும் மீதமுள்ள 40 கோடி பேருக்கு எதிர்ப்புத் திறன் இல்லாததால் தொற்று அபாயம் உள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments