Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இளங்கோவன், தென்னரசு சொத்து மதிப்பு எவ்வளவு?

Advertiesment
evks thennarasu
, ஞாயிறு, 12 பிப்ரவரி 2023 (10:45 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; இளங்கோவன், தென்னரசு சொத்து மதிப்பு எவ்வளவு?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மற்றும் அதிமுக கூட்டணியின் வேட்பாளர் தென்னரசு ஆகிவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சொத்து மதிப்பு இதோ
 
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 3 கோடியே 50 லட்சம் ரூபாய் சொத்து உள்ளது. இளங்கோவனின் மனைவிக்கு 7.16 கோடி சொத்தும், குடும்பம் சார்பில் 8.12 கோடி சொத்தும் உள்ளது. மேலும்  தனது பெயரில் ஒரு கோடியை 29 லட்சம் ரூபாய் கடன், மனைவி பெயரில் ஒரு கோடிய 71 லட்ச ரூபாய் கடன், குடும்பம் சார்பில் 55 ஆயிரம் ரூபாயும் கடன் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக வேட்பாளர் தென்னரசு சொத்து மதிப்பு இதோ:
 
தென்னரசுவுக்கு 2.27 கோடி ரூபாய் சொத்தும், அவரது மனைவி பெயரில் 1.78 கோடி  சொத்தும் உள்ளது. இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் கடன் இல்லை.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கச்சா எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா?