Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு அரசியல் செய்ய நேரமில்லை.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீதர் வேம்பு..!

Mahendran
வியாழன், 30 ஜனவரி 2025 (11:04 IST)
ஜோஹோ நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த ஸ்ரீதர் வேம்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆய்வு பணிகள் ஈடுபட போவதாக கூறியுள்ள நிலையில் அவர் அரசியலில் ஈடுபட போவதாகவும் பாஜகவில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகிறது.
 
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, ‘நான் அரசியலில் சேர்வதாக ஒரு செய்தி பரவி வருவதை கேள்விப்பட்டேன். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.
 
அடுத்த வாரம் நடைபெற உள்ள தொழிற்துறை ஆய்வாளர் குழுவிற்கு ஏஐ பற்றிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உத்தியை வழங்க நான் தீவிரமாக தயாராகி வருகிறேன்.
 
எனவே எனக்கு அரசியலில் ஈடுபடும் ஆசை துளியும் இல்லை, ஆழமான தொழில்நுட்ப ஆராய்ச்சி தான் எனது கனவு, அரசியல் செய்வதற்கான நேரமும் எனக்கு இல்லை, எனவே நான் யாரிடமும் அரசியலில் சேர்வது குறித்து பேசவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் ட்ரம்ப்! அதிர்ச்சியில் அமெரிக்கா!

பாலியல் வன்கொடுமை, கொலை புகார்: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபரை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!

குடியிருப்பு பகுதிகளில் ஹாரன் பயன்படுத்தக் கூடாது.. தமிழ்நாடு அரசு உத்தரவு!

புதிய உச்சத்தில் தங்கம் விலை.. 61 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்..!

புதிய கட்டணத்தில் தான் ஆட்டோக்களை இயக்குவோம்: ஆட்டோ ஓட்டுனர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments