Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் வைரஸ்... மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? உச்சநீதிமன்றம் கேள்வி

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (12:56 IST)
புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வி. 

 
தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புது வகை கொரோனா புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஓமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலியாக சர்வதேச விமான பயணிகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விமான நிலையத்திலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments