Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா, தெலங்கானாவை கனமழை: 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு..!

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (08:03 IST)
தமிழகத்தின் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்ததை அடுத்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திடீரென ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் எதிர்பார்த்ததை விட அதிக கன மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழை காரணமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இரண்டு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆந்திராவில் கனமழை கொட்டி தீர்த்ததாகவும் வெள்ளப்பெருக்கு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெள்ளம் சூழ்ந்த விஜயவாடா பகுதியில் விடிய விடிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த கனமழையில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பதாகவும் 32,000 முகாம்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் படகுகள், ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments