இன்று காலை 10 மணிக்குள் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (07:58 IST)
இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஆகிய   11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தியின் ‘வாக்குத்திருட்டு’ குற்றச்சாட்டை யாரும் நம்பவில்லை: காங்கிரஸ் பிரமுகர் திடீர் விலகல்..!

உலக வங்கி நிதியை திசை திருப்பி பெற்ற வெற்றி. NDA குறித்து ஜன் சுராஜ் குற்றச்சாட்டு

பீகார் முதலமைச்சர் யார்? அமித்ஷாவுடன் ஜெபி நட்டா தீவிர ஆலோசனை..!

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு.. பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்..!

வாக்காளர் பட்டியலை விட வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தது ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments