Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் விடிய விடிய பெய்த கனமழை..! வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்..!!

Mumbai Rain

Senthil Velan

, திங்கள், 8 ஜூலை 2024 (17:22 IST)
மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார்.
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மும்பையில் 6 மணி நேரத்தில் 300 மி.மீ. மழை பெய்துள்ளதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பேருந்து, ரயில் சேவைகள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியாக, 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், மும்பை நகரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
மும்பையில் கனமழை நிலவரம் குறித்து மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மந்த்ராலயாவில் கூட்டத்தை நடத்தி பிரஹன்மும்பை மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களுக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தியுள்ளார்.


கடற்கரைக்கு அருகில் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வெள்ளநீரை வெளியேற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பு.! வெற்றி பெற்ற ஹேமந்த் சோரன் அரசு..!!