Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அஜித்திற்கு ஒரு நியாயம், சரத்திற்கு ஒரு நியாயமா??” ஹெச்.ராஜா கேள்வி

Arun Prasath
சனி, 23 நவம்பர் 2019 (15:40 IST)
சரத் பவார் அன்று செய்ததை தான் தற்போது அஜித் பவாரும் செய்துள்ளார், இதை எப்படி குறை கூற முடியும்? என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திடீரென பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார், “பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல, இது அஜித் பவாரின் சொந்த முடிவு” என கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து ”அஜித் பவார் முதுகில் குத்துவிட்டார்” என தேசியவாத காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பாஜகவின்  தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ”1978ல் 37 எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸிலிருந்து வெளியேறிய சரத் பவார் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானது தவறில்லை என்றால், அஜித் பாவார் செய்ததை எப்படி குறைகூற முடியும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க மெடிக்கல் லீவ் எடுப்பீங்களா?.. பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்ட குவைத் தொழிலாளி..!

'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கு திருமணம்.. தொழிலதிபரை மணந்தார்..!

முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன்.. காரணம் என்ன?

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments