முதல்வர் எடப்பாடியார் புளுகி விடுகிறார்! – கடுப்பான ஸ்டாலின்!

Webdunia
சனி, 23 நவம்பர் 2019 (15:26 IST)
முதல்வர் எடப்பாடி உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக மீது அவதூறுகளை அள்ளி வீசுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தலை நேரடி தேர்தலாக மாற்றியதும், பிறகு அதை மீண்டும் நேரடி தேர்தலாக மாற்றியதும் ஸ்டாலின்தான். இப்போது அவர் போட்ட சட்டத்தை அவரே விமர்சிக்கிறார்” என பேசினார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ”முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்டப் புளுகு, ஆகாசப் புளுகாக அள்ளி விடுகிறார். மக்கள் முன்னிலையில் பொய்யும் புரட்டும் பேசுவது யாசித்து பெற்ற முதல்வர் பதவிக்கு அழகல்ல! அரசு விழாக்களை அரசியல் பிரச்சார மேடையாக முதல்வர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது” என கூறியுள்ளார்.

மேலும் 2006ல் அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதாகவும் அதனால் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கக்கூடாது என்பதற்காக மறைமுக தேர்தலாக மாற்றியதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா!.. வெனிசுலா எண்ணெய் கப்பல் பறிமுதல்!...

1000 காளைகள்!.. 600 வீரர்கள்!. அனல் பறக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு!...

டிக்கெட் புக் ஆகவே இல்லை.. பொங்கல் சிறப்பு ரயில்களை ரத்து செய்த ரயில்வே..!

தவெக பக்கம் சாயும் காங்கிரஸ்.. திமுக எடுத்த அதிரடி முடிவு.. ரகசிய ஆலோசனைகள்..!

‘ஜனநாயகன்’ படத்திற்கு ராகுல் காந்தி குரல் கொடுத்ததன் அரசியல் பின்னணி இதுவா?

அடுத்த கட்டுரையில்
Show comments