Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

8 மணி நேரம் திடீர் கோடீஸ்வரரான குஜராத் நபர்: என்ன நடந்தது?

Advertiesment
money
, வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:49 IST)
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் திடீரென 8 மணி நேரம் திடீர் கோடீஸ்வரரான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது டீமேட் கணக்கில் திடீரென 11,000 கோடி தவறுதலாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த குறுஞ்செய்தி அவரது மொபைல் போனுக்கு வந்தபோது அவர் அதிர்ச்சி அடைந்தார் 
 
அவரது வங்கி கணக்கில் 11 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட தகவல் வந்ததும் அவர்  அந்த தொகை குறித்து வங்கிக்கு தகவல் அளித்தார். இந்த நிலையில் அந்த தொகை தவறுதலாக வரவு வைக்கப்பட்டதை கண்டுபிடித்த வங்கி அதிகாரிகள் அதனை 8 மணி நேரம் கழித்து திரும்ப எடுத்துக் கொண்டனர்
 
டீமேட் கணக்கு என்பது பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கான கணக்கு என்பதும் இந்த கணக்கில் தான் தவறுதலாக 11,000 கோடி ரமேஷ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு அக். 1 முதல் புதிய நடைமுறை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!