Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர்கள் சந்தித்துக் கொள்ள அரசு காபி பார்கள்! – காங்கிரஸ் வாக்குறுதி!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (17:23 IST)
குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வடடோரா பகுதியில் காதலர்களுக்கு காபி ஷாப் அமைப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது வைரலாகியுள்ளது.

வட இந்தியாவின் குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. பஞ்சாபில் உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிரது. இந்நிலையில் குஜராத் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் குஜராத்தின் வடடோராவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் சிட்டி யூனிட் தலைவர் பிரசாந்த் படேல், வடடோராவில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றால் இளைஞர்கள் தங்கள் தோழிகளை சந்தித்து பேச வசதிகளுடன் கூடிய காபி பார்கள் மாநகராட்சி செலவில் கட்டப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அந்த காபி பார்களில் சிறிய அளவிலான பிறந்தநாள் பார்ட்டிகள்போன்றவற்றை கொண்டாடவும் வசதிகள் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு அப்பகுதி இளைஞர்களிடையே வரவேற்பும், பிறரிடமிருந்து எதிர்ப்பும் கிளம்பியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த செய்தி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

திருமணம் செய்ய வற்புறுத்திய பெண் கொலை.. 8 மாதங்களாக பிணத்தை பிரிட்ஜில் வைத்த நபர்..!

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments