Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை ஜி.எஸ்.டி கூட்டம்! – உயரப்போகிறதா ஜிஎஸ்டி வரிகள்?

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (20:33 IST)
மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நாளை நடைபெற இருக்கும் சூழலில் வரி குறைப்பு குறித்த அறிவிப்புகள் ஏதாவது வெளியாகுமா என்று வணிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 38வது ஜிஎஸ்டி கவுன்சில் நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 35 ஆயிரத்து 298 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. கடந்த முறை ஜிஎஸ்டி கவுன்சிலில் தங்கத்திற்கான வரி உயர்த்தப்பட்டதால்தான் சந்தையில் தங்கத்தின் விலையேற்றம் அதிகரித்ததாக பலர் கூறியுள்ளனர். இந்த கூட்டத்தில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிலைமையோ நேர்மாறாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார மந்த நிலையை இந்தியா சந்தித்திருப்பதாக கூறப்படும் நிலையில் ஜி.எஸ்.டி வரிவிகிதம் அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

வக்பு மசோதா.. வாக்கெடுப்பில் அதிமுக எம்பிக்களின் நிலை என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி மேலாளர் தற்கொலை: அன்புமணி கண்டனம்..!

கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா: மயிலாப்பூரில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

ஏப்ரல் 5 வரை வெளுத்து வாங்க போகும் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments