Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே மாதத்தில் ஜி.எஸ்.டி யால் 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் - மத்திய நிதி அமைச்சர் பெருமிதம்

Webdunia
புதன், 2 மே 2018 (12:19 IST)
ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி, ஜி.எஸ்.டி. அமலுக்கு கொண்டுவரப்பட்டது.  ஆகஸ்ட் 2017 முதல் மார்ச் 2018 வரையான காலத்தில் சராசரியாக மாதந்தோறும் ரூ. 89,885 கோடி வசூலானது.
 
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 458 கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு, ஒரே மாதத்தில் இவ்வளவு வரி வசூலானது இதுவே முதல்முறை ஆகும்.
ஜி.எஸ்.டி வரி வசூல் அதிகரித்திருப்பது பொருளாதாரம் வளர்ச்சியடைவதை காட்டுவதாக  நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments