Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக சிவசேனா இரண்டுக்கும் அல்வா கொடுத்த ஆளுநர்! பெரும் பரபரப்பு

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (22:47 IST)
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் சிவசேனா இணைந்து ஆட்சியமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த கூட்டணி முறிவடைந்தது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகியது. ஆனால் இந்த எண்ணமும் தற்போது வரை ஈடேறவில்லை. ஆளுநர் கூடுதல் அவகாசம் கொடுக்க மறுத்ததை அடுத்து சிவசேனா கட்சி ஆட்சியமைக்க கொடுத்த காலக்கெடு முடிந்து விட்டது 
 
இதனை அடுத்து பாஜக, சிவசேனா இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு ஆட்சி அமைக்க கொடுத்த வாய்ப்பை இழந்து விட்டதால் அடுத்ததாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நாளை இரவு 8.30 மணிக்குள் அந்தக் கட்சி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவு கொடுக்கும் கட்சிகளின் கடிதத்துடன் வர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார் 
 
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த அளவு எம்எல்ஏக்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் மற்ற கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதத்தை பெற்று நாளை இரவு 8.30 மணிக்குள் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெருமா? என்பது சந்தேகமே
 
இந்த நிலையில் மூன்று பெரிய கட்சிகளான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்து விட்டால் அடுத்ததாக குடியரசுத் தலைவர் ஆட்சி பரிந்துரை செய்யப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் நாளை இரவு வரை காத்திருந்து அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்கள் மீது மோதிய கார்.. 5 பெண்கள் உயிரிழப்பு..

சென்னை அருகே அம்மா உணவகத்தில் சீலிங் இடிந்து விழுந்ததால் பரபரப்பு... பெண் காயம்

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments