Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசியப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் – கோமதி மாரிமுத்து சாதனை !

Advertiesment
ஆசியப்போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் – கோமதி மாரிமுத்து சாதனை !
, செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (13:05 IST)
கத்தாரில் நடைபெற்று வரும் ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து.

23 ஆவது ஆசிய தடகளப்போட்டிகள் தற்போது கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இதில் 800 மீட்டருக்கான ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதாகும் கோமதி இந்த தொடரில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 70 வினாடிகளில் கடந்து அவரது முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதங்களுக்கு இடையில் மோதலைத் தூண்டினார் – சித்து பிரச்சாரத்துக்குத் தடை !