Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைவதை பற்றி கூறிய போது கடவுள் அதை ஏற்றுக் கொண்டார்- முன்னாள் முதல்வர்

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2022 (15:59 IST)
கோவா காங்கிரஸ் தலைவர்களான திகம்பர் காமத் உள்ளிட்ட மைக்கேல் லோபோ தலைமையிலான 8 எம்.எல்.ஏக்கள் பாஜகவின்  இணைந்துள்ளனர்.

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு  11  சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில்  முன்னாள் முதல்வர் திகம்பர்காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 பேர் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்,  வட மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோற்றது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகினர்.

தற்போது, ராகுல் கட்சியை பலப்படுத்த வேண்டும் ஒற்றுமையாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், கோவாவின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவின் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து திகம்பர் காமத் கூறியதாவது:  தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இருந்து விலகமாட்டோமென சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால், கடவுளிடம் சென்று பாஜகவின் இணையவுள்ளதாகக் கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments