Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளின் ஆடையை அவிழ்க்க கூறிய தலைமை ஆசிரியர் கைதா?

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2017 (21:46 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் முசாஃபார் நகரில் உள்ள ஒரு பள்ளியில் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே மாணவிகளின் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீபோல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 


இதுகுறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியர் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கல்வி அதிகாரி சந்திரகேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பல பெற்றோர்கள் இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் செய்துள்ளதால் எந்த நேரத்திலும் பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக உபி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன,.

இந்த நிலையில் இது போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை என்றும், பள்ளி ஊழியர்களிடம் தான் கண்டிப்புடன் இருப்பதால் பள்ளி ஊழியர்கள் தனக்கெதிராக செய்யும் சதியே இது என்றும் தலைமை ஆசிரியர் கூறியுள்ளார்.

ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கூறியபோது, 'இந்த சம்பவம் உண்மைதான் என்றும், ஆடையை அவிழ்க்காவிட்டால் பிரம்பால் அடிப்பதாக மிரட்டியதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை 'என்றும் கூறியுள்ளார்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments