Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (15:19 IST)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு வழங்கி வரும் நிலையில் தற்போது பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த மூன்று மாதங்களுக்கு இலவச சமையல் கிரைண்டர் அளிக்கும் திட்டம் ஒன்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்தியன் ஆயில் நிறுவனம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பின்படி அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.
 
இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் பயனாளிகள் மூன்று மாதங்களில் சுமார் 90 லட்சம் இலவச சிலிண்டர்களை பெற வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு ஏற்கனவே இன்று காலை சமையல் சிலிண்டரின் விலை ரூபாய் 65 குறைத்த நிலையில் தற்போது இலவசமாகவே சிலிண்டர் கிடைப்பது என்ற தகவல் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று முதல் இந்த இலவச சிலிண்டர்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்த சிலிண்டர்களை பெறும் மக்கள் வழக்கம்போல் சிலிண்டர் நிறுவனங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் அதன்பின் அவர்களது வங்கிக்கணக்கில் அவர் செலுத்திய பணம் முழுமையாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூவுனது குத்தமா? தூக்கத்தை கெடுத்த சேவல் மீது புகார் அளித்த நபர்!

எலக்ட்ரிக் வாகன துறையில் நுழையும் ஜியோ.. வெளியாகிறது ஜியோ சைக்கிள்..!

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் விலகல்.. 15 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்..!

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கு நேர்காணல் நடத்த தடை விதிக்க வேண்டும்! ராமதாஸ்

இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! பாரதிதாசன் பாடலை பகிர்ந்த முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments