Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கும்பல் - ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய், மகள்

Advertiesment
இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற கும்பல் - ஓடும் ரயிலில் இருந்து குதித்த தாய்,  மகள்
, திங்கள், 13 நவம்பர் 2017 (14:43 IST)
இளம்பெண்ணை ஒரு கும்பல் கற்பழிக்க முயன்றதால், அப்பெண்ணும், அப்பெண்ணின் தாயும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கொல்கத்தாவில் இருந்து ஒரு பெண்ணும் அவரின் 15 வயது மகளும் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி சென்றனர். அந்த ரயில் சந்தரி மற்றும் கான்பூர் இடையே சென்று கொண்டிருந்த போது, இளம்பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதனால் ஓடும் ரயிலில் இருந்து தாயும், மகளும் குதித்தனர். இதில், படுகாயம் அடைந்த அவர்கள் சுமார் 2 மணி நேரம் மயக்க நிலையில் இருந்துள்ளனர். அதன்பின், அவர்கள் எழுந்து சந்தரி ரயில் நிலையம் வந்தனர். ரத்த காயங்களுடன் அவர்களை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுபற்றி அந்த பெண் கூறியபோது “ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் அந்த ரயிலில் இருந்து 10-15 பேர் என்னுடைய மகளிடம் தவறாக நடக்க முயன்றனர். ரயில் ஒரு இடத்தில் நின்ற போது அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தேன். அவர்கள் மூன்று பேரை பிடித்து சென்றனர். அதன் பின் 30 நிமிடங்கள் கழித்து அவர்கள் அனைவரும் திரும்பி வந்தனர். அந்த போலீசாருக்கு அவர்கள் லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
 
அதன்பின் ஆவேசமாக இருந்த அவர்கள் என் மகளிடம் மீண்டும் தவறாக நடக்க முயன்றனர். என் மகள் அவர்களிடம் சண்டையிட்டாள். நானும் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டேன். அவர்கள் என் மகளின் ஆடைகள் முழுவதையும் கழற்றிவிட்டனர். எனவே, வேறு வழியில்லாமல் நாங்கள் இருவரும் ரயிலில் இருந்து கீழே குதித்து விட்டோம் என போலீசாரிடம் அப்பெண் வாக்குமூலம் அளித்தார்.
 
இதையடுத்து, ரயில்வே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடுத்தெருவில் நிறுத்திய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: சீமான் ஆவேசம்!