Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”காந்தியின் போராட்டம் ஒரு நாடகம்”.. பாஜக எம்.பி. சர்ச்சை

Arun Prasath
திங்கள், 3 பிப்ரவரி 2020 (13:45 IST)
மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகப் போராட்டம் என பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே சர்ச்சையாக பேசியுள்ளார்.
Mahatma Gandhi

பெங்களூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம், இது போன்ற நபர்களை எப்படி மகாத்மா என்று அழைக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

மேலும், “பிரிட்டிஷ் ஆதரவுடன் தான் அவருடைய போராட்டங்கள் நடைபெற்றது, அவர்கள் ஒரு முறை கூட போலீஸாரால் தாக்கப்பட்டதில்லை” எனவும் கூறியுள்ளார்.
BJP MP Anantkumar Hegde

முன்னதாக பாஜக எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர், “கோட்ஷே ஒரு தேச பக்தர்” என கூறியது சர்ச்சையை கிளப்பியது. பின்பு அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். இவரை தொடர்ந்து தற்போது அதே பாஜகவை சேர்ந்த எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

அடுத்த கட்டுரையில்
Show comments