Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படகு வாங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: கேலி செய்த கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:43 IST)
இந்தியாவின் தலைநகரம் டெல்லி மழைநீரில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் அரசு அதற்கு தீர்வு காணததால், கிரிக்கெட் வீரர்கள் கம்பீர் மற்றும் சேவாக் கேலி செய்து டுவிட்டரில் கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.


 

 
இந்தியாவின் வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மழை வெள்ளத்தால் தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கிறது. 
 
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், டெல்லியில் மழைநீர் சூழ்ந்துள்ளநிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது ஆட்சியாளர்கள் மக்களின் அடிப்படை பிரச்னைக்கு தீர்வுகாணாததால், படகு வாங்கவேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதற்கு பதலளித்துள்ள சேவாக், ‘சிறப்பான யோசனை, 2 படகுகளை வாங்கிவிடு, குறிப்பாக ஒற்றைப்படை பதிவெண், இரட்டைப்படை பதிவெண் கொண்டதாக அந்த படகுகள் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
 
மழைநீர் வெள்ளத்தால் நேற்று டெல்லியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண சில மாதங்களுக்கு முன் கெஜ்ரிவால் அரசு, ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவெண் அடிப்படையில் வாகனங்கள் இயங்க கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சைக்காக வந்தவரை திருடர் என நினைத்து அடித்து கொலை.. 12 மருத்துவமனை ஊழியர்கள் கைது..!

பிரதமர் வருகை எதிரொலி: கடலோர காவல்துறை கட்டுப்பாட்டில் குமரிக்கடல் ..!

ஆபாசமாக கேள்வி கேட்டதால் இளம்பெண் தற்கொலை முயற்சி.. பெண் உள்பட யூடியூப் நிர்வாகிகள் கைது..!

மீண்டும் ரூ.54,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்னும் அதிகரிக்கும் என தகவல்..!

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments