Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: புதிய உத்தரவு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (07:49 IST)
4 வயது குழந்தைக்கும் ஹெல்மெட் கட்டாயம்: புதிய உத்தரவு!
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற கட்டாய உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது என்பது தெரிந்ததே இருப்பினும் இரு சக்கர வாகனங்களில் செல்லும் குழந்தைகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது குறித்த தெளிவான உத்தரவு இல்லை 
 
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் நான்கு வயது குழந்தைகள் முதல் அனைவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
நான்கு வயது குழந்தைகள் முதல் அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக மாநிலம் முழுவதும் அமல்படுத்த அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து குழந்தைகளுக்கு ஹெல்மெட் வாங்க பெற்றோர்கள் ஹெல்மெட் கடைகளில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

விமான விபத்தில் இறந்த துணை அதிபர்.. இறுதி ஊர்வல வாகனமும் விபத்து! – மலாவியில் சோகம்!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி.. இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை..!

5ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ராகுல் காந்தியால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு.. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்: இன்று சோதனை ஓட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments