Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்: பாஜக கொடுத்த வாக்குறுதி

Webdunia
சனி, 26 நவம்பர் 2022 (17:02 IST)
தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற நிலை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது குஜராத்தில் வயதான பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற வாக்குறுதியை அம்மாநில பாஜக அளித்துள்ளது. 
 
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய 2 தேதிகளில் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. 
 
இந்த நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வயதான பெண்களுக்கு இலவசமாக பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என்பது உள்பட 40 முக்கிய வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு உள்ளன 
 
மேலும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி மற்றும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் உள்பட பல கவர்ச்சியான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. 
 
ஏற்கனவே குஜராத்தில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் மீண்டுமொரு முறை ஆட்சியை பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments