Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (11:08 IST)
அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் இன்று காலை காலமானார். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வருகின்றன. 47 வயதான கலிக்கோ புல்லின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அண்மையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் முதலமைச்சராக இருந்தவர் கலிக்கோ புல். இவர் 6 மாதங்கள் அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சில வாரங்களுக்கு முன்னர் பதவியில் இருந்து விலகினார் கலிக்கோ புல். இவரது ஆட்சியை உச்ச நீதிமன்றம் சட்டவிரோத ஆட்சி என கூறியிருந்தது.
 
இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டில் கலிக்கோ புல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் பதவியிலிருந்து விலகியதில் இருந்தே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
 
தூக்கில் தொங்கிய கலிக்கோ புல்லின் உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான், அவரது மரணம் தூக்கில் தொங்கியதால் நேர்ந்ததா அல்லது வேறு ஏதாவது கரணமா என உறுதியாக தெரியவரும்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments