Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ராம்குமார் காவலில் சட்டவிரோதம் இல்லை' - வழக்கறிஞர் மனு நிராகரிப்பு

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (10:18 IST)
உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான், போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்திருக்கிறார்கள் என்பதால், இதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

 
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை, மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வழக்கறிஞர் ராமராஜ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
 
இது தொடர்பாக திங்களன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படிதான், போலீசார் ராம்குமாரை காவலில் எடுத்திருக்கிறார்கள் என்பதால், இதில் சட்டவிரோதம் இல்லை.
 
எனவே, அவரை போலீஸ் காவலில் எடுப்பதற்கு எதிரான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க முடியாது என்று நீதிபதி கூறி விட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்ஜினியரிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. டிரைவரை தேடும் காவல்துறையினர்..!

சைஃப் அலிகானை கத்தியால் குத்திய நபர் அதிரடி கைது.. விசாரணையில் திடுக் தகவல் கிடைக்குமா?

நில மோசடி வழக்கு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்த சென்னை ஐகோர்ட்..!

போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: ஈரோடு இடைத்தேர்தல் குறித்து தவெக அறிவிப்பு

மகளின் ஆபாச புகைப்படங்கள் விற்பனை செய்த தாய், தந்தை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments