காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு 5 ஆண்டுகள் சிறை.. எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டதால் பரபரப்பு..!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (11:14 IST)
ரூபாய் 150 கோடி ரூபாய்  பணம் மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் கேதார் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டு  வங்கியில் முக்கிய பதவியில் இருந்த போது 150 கோடி ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.  

இதனை அடுத்து  சுனில் கேதார் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுனில் கேதாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் 12 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த நிலையில் இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால் சுனில் கேதார் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதாக சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.  

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டதாக கூறியிருப்பதை அடுத்து காங்கிரஸ் கட்சி மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜாமீன் கோரியும் மேல்கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருப்பதாக சுனில் கேத்தார்  வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments