நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமராக நினைத்துக்கொண்டு பேசுகிறார்: திருமாவளவன் கண்டனம்..!

Webdunia
திங்கள், 25 டிசம்பர் 2023 (10:47 IST)
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னை பிரதமர் போல் நினைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 
வெள்ள பாதிப்பு நிவாரணம் குறித்த நம்முடைய கோரிக்கையை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என்று கூறிய திருமாவளவன்  தமிழ்நாட்டிற்கு 21,000 கோடி வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்ட நிலையில் மத்திய அரசு இதுவரை தனது பங்கிற்கு ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. 
 
அதுமட்டுமின்றி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் தன்னை ஒரு பிரதமராக நினைத்துக் கொண்டு பேசுவதை போல ஒரு தொனியை வெளிப்படுத்தி உள்ளார். இது ஏற்புடையது அல்ல என்று கூறியுள்ளார்.
 
மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டியடிப்போம் என பெரியாரின் நினைவு நாளில் உறுதி ஏற்கிறோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments