Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் முதல் எக்ஸ்.இ. தொற்று - INSACOG சொல்வது என்ன??

Webdunia
புதன், 4 மே 2022 (08:46 IST)
இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்சாகோக் ( INSACOG ) நேற்று உறுதி செய்துள்ளது.

 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான எக்ஸ்இ என்ற தொற்று சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
ஏற்கனவே கொரோனா வைரஸ் 7 வகையான உருமாறிய நிலையில் இப்போது ஒமைக்ரான் வைரசில் இருந்து பி.ஏ.-1, பி.ஏ.-2 என்ற மேலும் 2 வகை வைரஸ் உருவாகி இருக்கிறது. பி.ஏ.-1, பி.ஏ.-2 ஆகிய இரண்டு வைரஸ்களும் ஒரே நபரின் உடலில் தொற்றினால், அவை இரண்டும் இணைந்து உருவாக்குவதுதான் இந்த எக்ஸ்இ வகை வைரஸ்.
 
கொரோனா ஒமைக்ரான் வைரஸின் எக்ஸ்.இ. துணை வகை மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடந்த சில வாரங்களாக தகவல்கள் உலா வந்தன. இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு எக்ஸ்.இ. தொற்று ஏற்பட்டுள்ளதாக கொரோனா மரபணு வகைப்பாட்டு கூட்டமைப்பான இன்சாகோக் ( INSACOG ) நேற்று உறுதி செய்துள்ளது.
 
ஒமிக்ரான் துணை மாறுபாட்டான எக்ஸ்இ உறுதிப்படுத்தப்பட்டாலும் இதன் கண்டறியப்பட்ட இருப்பிடம் இன்னும் வெளியிடப்படவில்லை. மேலும் இதன் பரவல் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. 35 நாட்களில் 5 கொலை செய்த மாற்றுத்திறனாளி..!

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. எப்போது?

கனமழை எச்சரிக்கை: தமிழக அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்கள்..!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்: தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி..!

அதானி, மணிப்பூர் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சி எம்பிக்கள்: மக்களவை ஒத்திவைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments