இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது மகளுக்கு ஐபோன் வாங்க சிங்கப்பூர் சென்றுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. சிங்கப்பூரில் உள்ள ஆப்பிளின் நிறுவனத்தில் நேற்று முன்தினம் புதிய ஐபோன் மாடல்கள் நேரடி விற்பனைக்கு வந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 13 மணி நேரம் வரிசையில் காத்திருந்து புதிய ஐபோனை வாங்கிச் சென்றனர்.
இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆமின் அகமது தோலியா என்பவர் தனது மகளுக்கு திருமணம் பரிசாக ஐபோன் வழங்க முடிவு செய்து சிங்கப்பூர் சென்றுள்ளார். நீண்ட நேரம் வரிசையில் நின்று புதிய மாடல் ஐபோன் வாங்கி வந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.