Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடிக்கொண்டிருக்கும்போதே தந்தை மரணம்: மகள் திருமணத்தில் நடந்த சோகம்

Webdunia
திங்கள், 27 மே 2019 (16:39 IST)
மகளின் திருமண நிச்சயதார்த்தத்துக்கு மைக்கில் பாடிய எஸ்.ஐ ஒருவர் திடீரென்று சரிந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரா புத்தந்துறை என்ற பகுதியில் வசித்தவர் விஷ்ணுபிரசாத் (55). இவர் திருவனந்தபுரம் அருகே கரமனை என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில்  உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். இவரது இளைய மகள் ஆர்ச்சாவுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை தேடிவந்தார்.
 
நல்ல வரன் கிடைத்த நிலையில், அடுத்ததாக திருமண ஏற்பாடுகளை கவனிக்கத் தொடங்கினார்.திருமணத்துக்கு முதல்நாள் அன்று நிச்சயமும் சிறப்பாக நடந்தவண்ணம் இருந்தது.
 
மேலும் தம் கடைசி மகளின்  கலியாணம் என்பதால்  கணக்குப்பார்காமல் செலவழித்தார். அந்த நிச்சயதார்த்தத்தில் இசை கச்சேரியும் நடந்தது. அதில் தானும் பாடக்கூடியவர் என்பதால் மற்ற இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து மேடையில் மைக் பிடித்து பாடத் தொடங்கினார்.
அப்போது திடீரென்று மேடையிலேயே மயங்கிச் சரிந்து விழுந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.மேலும் மகள் ஆர்ச்சாவும் கதறி அழுதார், பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மருத்துவனையில் விஷ்ணுபிரசாத்தை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
 
ஆனால் நாளை ஆர்ச்சாவுக்கு திருமணம் நடக்கவுள்ளதால், விஷ்ணுபிராசத்தின் கடைசி ஆசை அது வென்பதால், அவரை மருத்துவனையில் சிகிச்சை பெறுவதாக ஆர்ச்சாவிடம் கூறிவிட்டு நல்லபடியாக திருமணத்தை நடத்தினர் உறவினர்கள்.
 
திருமணத்திற்கு உண்டான அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின்னர்தான் ஆர்ச்சாவுக்கு  இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் ஆர்ச்சா  கதறி அழுந்த காட்சி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைத்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்