குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சரத்பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என மம்தா பானர்ஜி இடம் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது
இதனால் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் வேட்பாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆனால் பாஜக பொருத்தவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடுவோம் என்பதால் எந்தவித பரபரப்பும் இன்றி வேட்பாளரை தேடும் பணியில் இருப்பதாக கூறப்படுகிறது