விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 14 ஆம் தேதி முதல் இன்று வரை 27 நாள்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு வகையில் நூதன போராட்டங்களை நடத்தி போராடி வருகின்றனர்.
விவசாயிகள் அரை நிர்வணமாகவும், எலிக்கறி, பாம்புக் கறி உள்ளிட்டவற்றை சாப்பிட்டும், அரை மொட்டை, பாதி மீசை எடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பாடை கட்டி ஒப்பாரி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால் விவசாயிகள் குறித்து மோடி அரசி எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதனால் விரக்தி அடைந்த விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வைப்பதாக கூறி எழு விவசாயிகளை அழைத்து சென்று அலுவலகத்தில் இருந்த செயலாளரை சந்திக்க வைத்தனர்.
விரத்தியிலும் ஏமற்றத்திலும் விவசாயிகள் உடைகளை களைந்து நிர்வணமாக சாலையில் விழுந்து புரண்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். சோரு போடும் விவசாயிகளை சாலையில் நிர்வாணமாக்கிய மோடி அரசு இன்னும் வேறு என்னசெய்ய காத்திருக்கிறதோ??