Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு அழைக்கும் நளினி சிதம்பரம்! அவரை கோர்ட்டுக்கு இழுக்கும் அமலாக்கத்துறை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (06:46 IST)
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், அந்நிறுவனத்தின் தலைவர் சுதிப்தோசென்னிடம் விசாரணை நடத்தியபோது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கு பணம் கொடுத்ததாக தெரிவித்தார்.


 


மேலும், அதில், காங்கிரஸ் தலைவர் மனோரஞ்சனாசிங் மூலம் அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்துக்கு பணம் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
இது குறித்து விசாரிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள அமலாக்க பிரிவு அலுவலகத்துக்கு நேரில் ஆஜராகும்படி, அமலாக்க பிரிவினர் நளினி சிதம்பரத்துக்கு கடந்த மாதம் சம்மன் அனுப்பினர். இதற்கு நளினி சிதம்பரம், கூறியதாவது, ”இந்திய கிரிமினல் நடைமுறை சட்டப்படி, பெண் ஒருவரிடம் விசாரிப்பதாக இருந்தால் அவரது வீட்டிற்கு வந்துதான் விசாரிக்க வேண்டும். அலுவலகத்துக்கு அழைத்து விசாரிக்க முடியாது.” என்றார்.
 
இந்நிலையில், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் அமலாக்கப் பிரிவினர் ஆலோசனை நடத்தியதில், பணமோசடி தொடர்பான வழக்குகளில் பெண்களை அழைத்து விசாரிக்க தடை இல்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள். அதனால், அமலாக்கத் துறையினர், நளினிசிதம்பரத்துக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளார்கள்.

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்சி F55..! அதிரடி விலை.!!

பழநி முருகன் கோயிலில் மே 30ஆம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தம்! என்ன காரணம்?

கேரளாவில் மேகவெடிப்பால் கனமழை: 6 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.! 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments