Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மகிழ்ச்சி' - பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம்! பெண் வீராங்கனை சாதனை!

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (05:58 IST)
பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 


 
 
இந்நிலையில், பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவை சேர்ந்த தீபா மாலிக் 4.61 மீ., தூரம் குண்டு எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 
 
வெள்ளி பதக்கம் வென்ற அவருக்கு ஹரியானா அரசு 4 கோடி ரூபாய் பரிசாக அறிவித்துள்ளது. அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 
முன்னதாக, பாராலிம்பிக்ஸ் போட்டியில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். அதே போட்டியில், பஞ்சாப்பை சேர்ந்த வீரர் வருண் சிங் வெண்கல பதக்கம் வென்றார்.

தற்போது, இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். இதன் மூலம், பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மூன்று பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை ஜனாதிபதி ராஜினாமா விவகாரம்: இரு அவைகளும் அமளியால் ஒத்திவைப்பு..!

சென்னை விமான நிலையத்தில் முன் பதிவு டாக்சிகளுக்கு ஆன்லைன் வசதி: பயணிகளுக்கு பெரும் நிம்மதி!

ஒரே நாளில் உச்சம் சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.74000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

நடுரோட்டில் மின் கம்பங்கள்.. சொந்த காசை செலவு செய்து அகற்றிய எம்.எல்.ஏ..!

கேரளா விரைவில் முஸ்லிம் மாநிலமாக மாறக்கூடும்.. வெள்ளப்பள்ளி நடேசன் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments