Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் 'மிஷன் சக்தி' உரை: ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Webdunia
வியாழன், 28 மார்ச் 2019 (19:21 IST)
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது டுவிட்டரில் இன்னும் சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தை தெரிவிக்கவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மீண்டும் பணமதிப்பிழப்பா? என்பது உள்பட பல ஐயங்கள் அனைவரிடத்தில் தொற்றி கொள்ள ஒரு வழியாக 'மிஷன் சக்தி' என்ற விண்வெளி திட்டத்தின் சாதனை குறித்த தகவலை பிரதமர் மோடி வெளியிட்டார்.
 
பிரதமரின் இந்த உரை தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் இவ்வாறு பேசியது சரியா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது
 
இந்த நிலையில் பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீசுக்கு நாளைக்குள்  தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ ஆகியவை பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments