Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துரத்திய மரணம்: தூர்தர்ஷன் ஊழியரின் உருக்கமான வீடியோ

துரத்திய மரணம்: தூர்தர்ஷன் ஊழியரின் உருக்கமான வீடியோ
, வியாழன், 1 நவம்பர் 2018 (08:09 IST)
தூர்தர்ஷன் உதவியாளர் தனது தாய்க்கு அனுப்புவதற்காகப் பதிவு செய்த வீடியோ பார்ப்பவர்கள் மனதை உருக வைத்துள்ளது.
 
சத்தீஸ்கரில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக சூறாவளிப் பிரச்சாரங்களை வேட்பாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தேர்தல் சம்மந்தமாக செய்தி சேகரிக்க தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த் சாஹு, உதவியாளர் மூர்முகுத் சர்மா, பத்திரிகையாளர் தீரஜ் குமார் ஆகியோர் தண்டேவாடா மாவட்டத்தில் முகாமிட்டிருந்தனர்.
 
நேற்று முன்தினம் செய்து சேகரிக்க ஒளிப்பதிவாளர் அச்சுதானந்த், நிருபர் திரஜ் குமார் மற்றும் உதவி ஒளிப்பதிவாளர் மூர்முக்த் ஷர்மா உள்ளிட்டோர்  சென்றுள்ளனர். அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் அச்சுதானந்த் மற்றும் இரு காவலர்களை பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
 
மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த வேளையில் மரண படுக்கையில் இருந்த உதவியாளர் மூர்முகுத் சர்மா, தன் அன்புத் தாயாருக்கு ஒரு வீடியோவை பதிவு செய்தார். அந்த வீடியோவில் மாவோயிஸ்டுகளின் துப்பாக்கி சூடு சத்தம் காதை கிழிக்கிறது.
 
வீடியோவில் அம்மா, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். செய்தி சேகரிக்க வந்த இடத்தில் மாவோயிஸ்டுகள் எங்களை சூழ்ந்து கொண்டார்கள். இந்த தாக்குதலில் நான் கொல்லப்படலாம். உயிர் பிழைத்தால் நன்றி சொல்வேன். மரணம் என்னை நெருங்கியபோதிலும் எனக்கு பயம் இல்லை என உருக்கமாக பதிவு செய்துள்ளார். நல்ல வேலையாக இவர் அந்த தாக்குதலில் தப்பித்து விட்டார்.
 
இந்த வீடியோ வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்கும் விதமாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடியின் அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது: முதல்வர் ஆவேச பேச்சு