Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிகார குமாரிடம் சிக்கிய பாம்பு! – துண்டு துண்டான பரிதாபம்!

Webdunia
புதன், 6 மே 2020 (13:02 IST)
கர்நாடக மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் மது பிரியர் ஒருவர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மது கிடைக்காமல் மது பிரியர்கள் கடும் உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கர்நாடகா கோலார் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்ற இளைஞர் மதுக்கடைகள் திறந்த மகிழ்ச்சியில் முட்ட முட்ட குடித்து விட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது சாலையில் பாம்பு ஒன்று குறுக்கிடவே ஆத்திரமடைந்த குமார் அதை பிடித்து கழுத்தில் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
கழுத்தில் பாம்புடன் குமார் வீடு திரும்பியதை கண்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிறகு பாம்பை பிடித்து துண்டு துண்டாக கடித்து துப்பியிருக்கிறார் குமார். போதையில் அவர் செய்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து தகவலறிந்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். போதையில் இளைஞர் ஒருவர் பாம்பை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெற்கில் இருந்து வடக்கு வரை ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்.! ஸ்டாலினுக்கு ராகுல் போட்ட பதிவு..!!

பதவிக்காக தன்மானத்தை இழந்த திமுக எம்.பி.க்கள்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments