Publish Date: Thu, 22 Nov 2018 (15:11 IST)
Updated Date: Thu, 22 Nov 2018 (15:14 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு அதே ஊரைச்சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது.
இந்த திருமணத்திற்காக தன் சொத்தை விற்று அழகான மனைவிக்காக கிரேண்டாக செலவு செய்திருக்கிறார்.
திருமணத்திற்குப் பின் சில நாட்கள் கழித்து தனது மனைவியிடம் செலவுக்கான தொகையை வரதட்சனையாக கேட்டு தினமும் நச்சரித்துள்ளார்.
ஒருகட்டத்தில் கைஓங்கி மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
பலமாக காயப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின் வீட்டிற்கு திரும்பிய மனைவியை ஆகாஷ் தொடர்ந்து திட்டியுள்ளார். மனைவி அவரை திருப்பி திட்ட ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆகாஷ் மனைவியின் நாக்கை அறுத்துள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தன் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க அவர்கள் போலீஸிடம் புகார் தெரிவிக்க போலீஸார் ஆகாஷ் மீது வரதட்சனை கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிந்து ஆகாசை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.