Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகுபலி படத்தை காட்டி அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் புது யுக்தி

பாகுபலி படத்தை காட்டி அறுவை சிகிச்சை - மருத்துவர்கள் புது யுக்தி
, செவ்வாய், 3 அக்டோபர் 2017 (14:19 IST)
பாகுபலி படத்தை காட்டி ஒரு பெண்ணிற்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.


 

 
ஆந்திர  மாநிலம் குண்டூர் பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்த ஒரு பெண்(43) வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில், அவரது மூளையில் ஒரு கட்டி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மேலும், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
 
ஆனால், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளி விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பது மருத்துவ விதி. இதற்கு என்ன செய்யலாம் என யோசித்த மருத்துவர்கள் ஒரு வித்தியாசமான யுக்தியை கண்டுபிடித்தனர்.
 
அதாவது, சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு, தமிழ், ஹிந்தி, சீனா என பல மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்த பாகுபலி படத்தை, லேப்டாப்பில் போட்டுக் காண்பித்தவாறே அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். 
 
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த அந்த அறுவை சிகிச்சையில், நோயாளி பயப்படாமல், பாகுபலி படத்தை ரசித்தவாறே இருந்தாராம். மேலும், அப்படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சிகளுக்கு ஹம்மிங் செய்து கொண்டிருந்தார் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
இந்த சிகிச்சை வெற்றியடைந்திருப்பதால், அதற்கு பாகுபலி மூளை அறுவை சிகிச்சை என மருத்துவர்கள் பெயர் வைத்துள்ளனர். இது போன்ற சிகிச்சையை இனி பலருக்கும் செய்ய திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்கிய கேரள உயர்நீதிமன்றம்