Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுகுடித்துவிட்டு நோயாளி மீது விழுந்த டாக்டர் ! என்ன கொடுமை இது ?

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (20:54 IST)
உத்தரபிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள ஒரு சமூகநல மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் மது குடித்துவிட்டு நோயாளியின் மீது விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் காஸ்கஞ்ச் என்ற இடத்தில் ஒரு சமூகநல மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு விபத்தில் சிக்கிய மதம் என்பவருக்கு சிகிச்சை அளிக்க அவரது உறவினர்கள் அந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துவந்தனர். 
 
அப்போது இரவு நேரல் பணியில் இருந்த மருத்துவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததாகத் தெரிகிறது. அவர் சிகிச்சைக்கு வந்த நோயாளி மதன் மீதும் தள்ளாடியபடி விழுந்ததாகவும், அவரது சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
அதற்கு மதன் உறவினர்கள்,5 ஆயிரம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.ஆனால் அதை மருத்துவர் ஏற்கவில்லை, இதுகுறித்து மதனின் சகோதர  மருத்துவரிடம் கேட்டுள்ளனர். அதனால் கோபம் அடைந்த மருத்துவர் அவரை தாக்கினார். அதனால் வெகுண்டெழுந்த உறவினர்கள் மருத்துவரை சரமரியாக அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலைக்கழகம் நாளை வழக்கம் போல் இயங்கும்: நிர்வாகம் தகவல்

அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை செய்த தமிழ் பெண்! குவியும் பாராட்டுகள்!

அண்ணா பல்கலை மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது தவறு: காங்கிரஸ் சர்ச்சை கருத்து

நூல் அஞ்சல் சேவையை திடீரென நிறுத்திய அஞ்சல் துறை.. அதிர்ச்சியில் புத்தகப்பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments