Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தே.மு.தி.க.வின் பேரம் : அதிமுக கைவிரிப்பு..? ஸ்டாலின் கடுப்பு !!

தே.மு.தி.க.வின் பேரம் : அதிமுக கைவிரிப்பு..?  ஸ்டாலின் கடுப்பு !!
, வியாழன், 28 பிப்ரவரி 2019 (13:32 IST)
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் நிலையில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ஆளும், எதிர் கட்சிகள் தேமுதிகவை தம் கூட்டணிக்குள் இழுக்கப் பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் ’தன் கெத்தை’ விட்டுக்கொடுக்காத விஜயகாந்த் இன்னும் தொகுதி உடன்பாட்டில் இழுபறியாகவே இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்டாலின் இதற்குமேல் பேரம் நடத்த முடியாது என  தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு ஐந்து தொகுதிகளும் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு கூடுதலாக ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
webdunia
இதேபோல் அதிமுக தேமுதிகவுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமாவுக்கு கொடுத்ததுபோல் தங்களுக்கும் வழங்க வேண்டுமென அதிமுகவுடன் தேமுதிக கோரிக்கை வைத்துள்ளது. இதனை அதிமுக ஏற்க மறுத்துவிட்டது இதனையடுத்து  4 தொகுதிகள் மற்றும் அத்துடன் ஒரு ராஜ்ய சபா சீட் மற்றும் நிதி வேண்டும் என பேரம் பேசப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு எட்டாத நிலையில் தேமுதிக சற்று தயக்கம் காட்டியது. அதன்பின்னர் அமைச்சர்  ஜெயக்குமார் தேமுதிக வந்தால் மகிழ்ச்சி வராவிட்டால் கவலையில்லை என்றார்.
webdunia
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக , விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி உடன்பாடு முடிவடைந்திருக்கிறது.
webdunia
இதற்கிடையில் திமுகவும் விஜயகாந்தின் தேமுதிக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மக்களவையில்  4 இடங்கள் மற்றும் ராஜ்ய சபாவில் ஒருஇடம் , தேர்தலுக்கு  நிதி வேண்டுமென தேமுதிக கேட்பதாக  தெரிகிறது. ஆனால் ராஜ்யசபா சீட் தரமுடியாது. நிதியும் தரமுடியாது என திமுக இறுதியாகக் கூறிவிட்டது.
இதனால் தேமுதிக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் இருக்கிறது. இந்நிலையில் மார்ச் 1- ஆம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு திமுக தேமுதிகவுக்கு கெடு விதித்துள்ளது. இதேபோல் அதிமுகவும் மார்ச் 5ஆம் தேதி வரை கெடு விதித்துள்ளது. எனவே இன்றைக்குள் கூட்டணியை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தேமுதிக இருந்தது.
webdunia
தற்போது இதுவரை தேமுதிகவை கூட்டணிக்கு அழைத்தது போதும் இனிமேல் அவர்களாகவே வந்தால் வரட்டும், இல்லையென்றால் பரவாயில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
 
இதெல்லாவற்றையும் விட இத்தனை சிக்கலில் தேமுதிக இருந்தாலும் நேற்று சந்திராஸ்டமி, இன்று நவமி அதனால்தான் தங்கள் முடிவை அவர்கள் அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானி அபிநந்தன் சிக்கியது எப்படி ? – பாகிஸ்தான் நாளேடு பரபரப்பு செய்தி !