Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து.! அதிரடி அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 6 நவம்பர் 2023 (09:35 IST)
திருப்பதி கோவிலில் நவம்பர் 12ஆம் தேதி  தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருப்பதை அடுத்து அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். அன்றைய தினம் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும் தீபாவளி தினத்தில் காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோவில் தங்க வாசல் அருகே தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் என்றும் இதனை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவி சகோதரராக கோவிலில் இருக்கும் தங்க வாசல் எதிரே எழுந்தருள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தீபாவளி ஆஸ்தானத்தை பார்க்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கஞ்சா, போதை மாத்திரை ஆன்லைனில் விற்பனை: சென்னை பொறியியல் மாணவர்கள் கைது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு.. வெள்ளை மாளிகைக்கு திடீர் பாதுகாப்பு அறிவிப்பு..!

அமெரிக்க அதிபர் தேர்தல்: டொனால்டு டிரம்ப் முன்னிலை.. கமலா ஹாரிஸ் பின்னடைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments