Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பயன்படும் புதிய மருந்து – இந்தியாவில் விலை எவ்வளவு தெரியுமா?

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (13:09 IST)
கொரோனாவுக்கு நல்ல பயனளிப்பதாக சொல்லப்படும் டெக்ஸாமெதசோன் என்ற மருந்து இந்தியாவில் வெறும் 10 ரூபாய்க்கு கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு பொதுவான ஒரு தடுப்பு மருந்து இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு முறைகள் பின்பற்ற படுகின்றன. அவற்றில் பெரும்பாலும் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் என்ற மலேரியாவுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை ஏராளமாக இந்தியாவிடம் இருந்து அடாவடியாக வாங்கி பயன்படுத்தி வருகிறது அமெரிக்கா. ஆனால் இந்த மருந்தை பயன்படுத்துவதால் பல பக்கவிளைவுகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பாதித்து வெண்டிலேட்டரில் இருப்பவர்களுக்கு உயிர் காக்கும் மருந்தாக டெக்ஸாமெதசோன் என்ற நல்ல பலனளிப்பதாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தீவிர நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வெண்ட்டிலேட்டர் உதவியுடன் இருக்கும் 5 பேரில் மூன்று பேர் இம்மருந்தால் உயிர் பிழைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் லேசான கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளவர்களுக்கு இந்த மருந்தால் எந்த பயனும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மருந்து பல நிறுவனங்களால் தயாரிக்கப்படுவதால் 10 ரூபாய் முதல் இந்த மருந்து கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments