Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருக்களில் கார் நிறுத்தவும் இனி கட்டணம்: டெல்லி மாநகராட்சி திட்டம்

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (23:00 IST)
இப்போதெல்லாம் கார்  வாங்குவது என்பது வெகு எளிது. வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கார்  வாங்க லோன் தருகிறது. ஆனால் காரை வாங்குபவர்களில் பெரும்பாலானோர்களுக்கு பார்க்கிங் செய்ய இடம் கிடையாது. தெருக்களில் தான் பலர் காரை நிறுத்துவதுண்டு

இந்த நிலையில் டெல்லி மாநகராட்சி இனி தெருக்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு கட்டணம் வாங்க முடிவு செய்துள்ளது. சாலைகள், தெருக்கள் அல்லது சந்துகளில் கார் நிறுத்துபவர்கள் இனிமேல் மாநகராட்சியில் கட்டணம் கட்டி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் இந்த நடைமுறை இன்னும் ஒருசில வாரங்களில் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டணம் எவ்வளவு என்பதை முடிவு செய்ய மாநகராட்சி ஒரு குழு அமைத்துள்ளதாகவும், இந்த குழு பொதுமக்களின் கருத்தை கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மட்டும் சுமார் ஒரு கோடி கார்கள் தெருக்களில் நிறுத்தப்பட்டு வருவதாகவும், இவை அனைத்துக்கும் கட்டணம் வசூல் செய்தால் டெல்லி மாநகராட்சியின் வருமானம் எகிறும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி..! எம்ஜிஆர் பேசிய வீடியோவை வெளியிட்ட அதிமுக!

கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகள் முடிவது எப்போது? ரயில்வே நிர்வாகம் தகவல்..!

தமிழ்நாட்டுக்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! இந்திய வானிலை ஆய்வு மையம்..!

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

அடுத்த கட்டுரையில்
Show comments