Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோதனை ஓட்டத்தில் சுவரை உடைத்து நின்ற மெட்ரோ ரயில்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 20 டிசம்பர் 2017 (23:35 IST)
டெல்லியில் டிரைவர் இல்லாத மெட்ரோ ரயிலை வரும் 25ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைக்க இருந்த நிலையில் இன்று அந்த ரயிலின் சோதனை ஓட்டம் நடந்தது

ஆனால் இந்த சோதனை ஓட்டத்தில் ரயில் பக்கவாட்டு சுவரில் மோதியதோடு, அந்த சுவரை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளானது. இதனால் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்

சரியான திட்டமிடல் இல்லாமல் அவசரகோலத்தில் சோதனை ஓட்டத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.

இந்த நிலையில் முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் நான்கு மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments