Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலையில் காவல் அதிகாரி; மாலையில் மன்மதன்! – டெல்லியில் சிக்கிய போலீஸ் அதிகாரி!

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (19:27 IST)
டெல்லியில் மாலை வேளைகளில் பெண்களை பின் தொடர்ந்து சில்மிஷ செயல்களில் ஈடுபட்ட காவல் அதிகாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென்மேற்கு டெல்லியின் துவாரகா பகுதியில் சாலையில் தனியாக செல்லும் பெண்களை மர்ம ஆசாமி ஒருவர் பின் தொடர்வதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் மர்ம ஆசாமி ஒருவர் தன்னை காரில் பின் தொடர்ந்து வந்து முகவரி ஒன்றை கேட்டதாகவும், அதை சொல்ல முயன்றபோது தனது கால்சட்டையை அவிழ்த்து உறுப்பை காட்டியதாகவும், தான் சத்தம் போட்டதும் அவர் ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

பெண்களின் தொடர் புகாரால் நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர் 200 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து மர்ம ஆசாமியை கண்டுபிடித்தபோது அவர்களுக்கே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சில்மிஷ காரியங்களில் ஈடுபட்டவர் டெல்லி போலீஸ் துணை ஆய்வாளர் புனீத் க்ரேவல் என தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து க்ரேவல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்