இன்று முதல் ஆரம்பமாகும் கியூட் தேர்வுகள்.. தேர்வர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள்?

Mahendran
வியாழன், 13 மார்ச் 2025 (16:14 IST)
முதுகலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு கியூட் விண்ணப்பித்த மாணவர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை  வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 2ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. இன்று முதல் அதாவது மார்ச் 13 முதல் 31ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெறவுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அனைத்து விண்ணப்பங்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இந்த தேர்வை எழுதுபவர்களுக்கான சில தகவல்கள்  மற்றும் விதிமுறைகள்

* மொத்தம் 312 தேர்வு மையங்கள், வெளிநாடுகளிலுள்ள மையங்களும் இதில் அடங்கும்.

* தேர்வு நேரத்திற்கு முன்பே மாணவர்கள் வந்து இருக்க வேண்டும்.

* முழு தேர்வறையும் சிசிடிவி கண்காணிப்பில் இருக்கும்.

* ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

* தேர்வறையின் வாயில் மூடப்பட்ட பிறகு யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மாணவர்கள் கொண்டு வர வேண்டிய பொருள்கள்
*  நுழைவுச் சீட்டு
* அடையாள அட்டை (ஆதார், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை)
* ஒரு புகைப்படம்
*  பேனா
* குடிநீர் பாட்டில்

மேற்கண்டவை தவிர  எந்த பொருள்களும் கொண்டு வர அனுமதி இல்லை என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினைப் பார்வையிடும்படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments