Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 - 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (09:30 IST)
மத்திய அரசின் தரவுகளின் படி 1 - 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, ஓய்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து வரும் சூழலில், மூன்றாம் அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆம், ஆக்டோபர் மாதம் வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் தரவுகளின் படி 1 - 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 7.04% ஆக அதிகரித்துள்ளது. முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
 
இதனால் குழந்தைகளை அதிக கவனுத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2 - 18 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பரிசோதனை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!

கருணாநிதி பெயரில் அவசியமற்ற பணிகள் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments