Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும்… திருமா வளவன் அழுத்தம்!

Advertiesment
புதிய ஆளுநரை திரும்ப பெறவேண்டும்… திருமா வளவன் அழுத்தம்!
, சனி, 11 செப்டம்பர் 2021 (15:40 IST)
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக ஆளுநராக நாகலாந்து அளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை திரும்ப பெறவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமையகத்தில் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் ‘உளவுத்துறையிடம் தொடர்பில் உள்ள ஒருவரை ஆளுநராக நியமித்தது வேண்டுமென்றே செய்தது போல உள்ளது. ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை நியமிக்க வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரை திரும்பப் பெறவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் நோயாளிகள் எண்ணிக்கை - ஆரணி ஓட்டல் சர்ச்சை!