Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5.66 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள்! – மாநிலவாரி நிலவரம்!

Webdunia
செவ்வாய், 30 ஜூன் 2020 (09:55 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே நாளில் 18 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,66,840 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 16,893 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,34,822 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,69,889 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,610 பேர் பலியான நிலையில் 88,960 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை.

தமிழ்நாடு – 86,224
டெல்லி – 85,161
குஜராத் – 31,938
உத்தர பிரதேசம் – 22,828
மேற்கு வங்கம் – 17,907
தெலுங்கானா – 15,394
ராஜஸ்தான் – 17,660
ம்த்திய பிரதேசம் – 13,370
கர்நாடகா – 14,295
ஹரியானா – 14,210

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments